12 Apr 2011

நம் வாக்கு தகுதியானவர்களுக்கே

  அன்புள்ள நல்மனம் படைத்த தமிழ்குடி மக்களே !
எப்படி நம் வீட்டை நிர்வாகம் செய்யும் நம் வாழ்கை துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் மிக கவனமாக இருப்போமோ அதை போலவே நம் நாட்டை நிர்வாகம் செய்பவர்கள்  நல்லவர்களாகவும்  நேர்மையானவர்களாகவும் இருப்பது மிக முக்கியம் ......ஆகவே நாம் அளிக்க போகும் ஒவ்வொரு வாக்கும் சரியானவர்களுக்கு பொய் சேர நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.  இதை படிப்பவர்கள் தன்னால் இயன்ற வரையில் நண்பர்கள் , உறவினர்கள், தெரிந்தவர்கள் ,அறிந்தவர்கள், LIONS கிளப் , ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மேலும் வேறு எல்லா வகையுளும் இந்த கருத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை ஓர் வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன்

5 Apr 2011

அன்னதானம் செய்வோம் மனிதர்களாக மாறுவோம்

வாழவழியின்றி  நம் இந்திய தேசத்தில் எத்தனையோ மனிதர்கள் பசியால் வாடுகின்றனர்.  அவர்கள் தனிமனித ஒழுக்கம் ,சமுதாயம் ஆகிய பண்பாடுகள் பற்றி வாழுகின்றனர்.

ஆனால் பண வசதி படைத்த பல மனிதர்கள் குறிப்பாக அரசு அதிகாரிகள் , அரசியல்வாதிகள் ( ஊழல் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் ) மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தாங்கள் செய்கின்ற பாவத்தை போக்குவதற்கு  ஏன் அன்னதானம் வாழ் நாள் முழுவதும் செய்யகூடாது . 

தவிரவும்  வாய்ப்பு வசதி படைத்த அணைத்து தரப்பு மக்களையும் இந்த பதிவின் மூலம் நான் வேண்டுவதெல்லாம் நம் வாழ்கையின் அடிப்படை தேவைகளில்  இந்த அன்னதானத்தையும் சேர்த்து கொள்ள விரும்புகிறேன் .

தானத்தில் சிறந்தது அன்னதானம் !




மகேசனின் குரல் ( மக்கள் குரல் என்றும் கூறலாம் )

மத்திய மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் அதன்பிறகு அடுத்த தேர்தல் வரை சட்டமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்களை தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருமேயானால் அவர்கள் மக்கள் பணி தவிர வேறு பணி செய்ய வாய்ப்பு இல்லாமல் போகும். தேர்தல் ஆணையத்திற்கும் நிரந்தர ஊழியர்கள் கிடைத்து மேலும் சிறப்பாக செயல் பட முடியும்.

4 Apr 2011

தினம் மௌனம் பழகுவோம்

மௌனம் என்பது வெறும் பேசாமல் மட்டும் இருபதல்ல ......மனதில் எதையும் எண்ணாமலும் இருக்க வேண்டும் .....இதை அறியத்தான் நமது சித்தர்கள் மௌனம் பழக அமைதியான சூழல் மிகுந்த காட்டினை தேர்ந்தெடுத்தார்கள் !  ஆனால் நம்மால் வீட்டையும் விட முடியாது !  காட்டிற்கும் போக முடியாது !  எனவே தினமும் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு  கிடைக்கிறதோ மெளனமாக இருக்க பழகுவோம்....இதை முயற்சித்து பாருங்கள் ....பிறகு தெரியும் நாமும் ஓர் சித்தனென்று .......

வாழ்க கந்தன் ! வளர்க அவன் சிந்தனை !!!!

3 Apr 2011

கனவின் முடிவு இதோ










வாழ்த்துக்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு ! நெடுநாள் கனவு ஒரு நாள் நிஜமாகியது ! இந்த வெற்றியைப்போல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வருகிற மாநில சட்டசபை தேர்தலில் 100 % வாக்களித்து நம்பிக்கையான ஒரு கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற அனைவரையும் இந்த பதிவின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன் ! வாழ்க இந்திய வளர்க ஜனநாயகம் !

1 Apr 2011

அரசியல்வாதிகளின் உண்மையான தகுதிகள்

தேர்தல் சமயத்தில் தான் அரசியல்வாதிகளின் உண்மையான தகுதிகள் வெளியே தெரியுமாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் நாமோ அவர்களின் தராதரத்தை சீர்தூக்கி பார்க்காமல் பணத்தின் அடிப்படையில் ஓட்டை போடுவதினால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர்களின் அராஜகத்தை பார்த்து ஒன்றும் செய்ய இயலாமல் போகிறோம்.,